search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் அன் சந்திப்பு"

    சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்க சென்று 38 ஆயிரம் ரூபாய் செலவழித்து அவரது கார் அருகே நின்று செல்பி எடுத்த திருப்தியில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகிழ்சி அடைந்துள்ளார். #TrumpKimSummit
    சிங்கப்பூர் : 

    மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார்.

    இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஓட்டல் வரவேற்பு அறையில் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார். ஆனால், டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது. 

    இது குறித்து பேசிய மகாராஜ் மோகன், அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என அவர் தெரிவித்தார். #TrumpKimSummit 
    சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை நிறைவு செய்துவிட்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #TrumpKimSummit #SingaporeSummit
    சிங்கப்பூர் :

    பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

    இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா - வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு டொனால்டு டிரம்ப் சிங்கப்பூரில் உள்ள பய லேபார் விமான தளத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #TrumpKimSummit #SingaporeSummit
    சிங்கப்பூரில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையே இன்று கையெழுத்தான அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. #singaporesummit #Trumpkimsummit
    டெஹ்ரான் :

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் முகமது பாகேர் நோபாக்ட், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் குணாதிசயம் பற்றி எங்களுக்கு தெரியாது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே இன்று கையெழுத்தான அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் அவர் நாடு திரும்பும் முன்னரே ரத்து செய்யப்பட்டாலும் செய்யப்படாலாம் என கூறினார்.



    மேலும், டொனால்ட் டிரம்பை  கிம் ஜாங் அன் நம்பக் கூடாது. ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை, டிரம்ப் வெளிநாட்டில் இருக்கும் போதே ரத்து செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது என முகமது பாகேர் நோபாக்ட் தெரிவித்தார். #singaporesummit #Trumpkimsummit
    ×